கிராம்பில்_உள்ள_பலவித_மருத்துவ_குணங்கள்
கிராம்பில்_உள்ள_பலவித_மருத்துவ_குணங்கள் - மசாலா பொருட்கள் அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என அனைவருக்குமே தெரியும். அதிலும் கிராம்பில் ஏராளமான நன்மைகள் நிறைந்திருப்பது சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. பல் வலி என்றால் உடனே ஒரு கிராம்பை வாயில் போட்டு கடித்துக் கொண்டால், பல் வலி போய்விடும் என்று சொல்வார்கள். — கிராம்புவில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தீர்க்கலாம். கிராம்புகளில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், நியாசின், ஃபோலேட், வைட்டமின் சி, பி, ஈ, கே மற்றும் டி போன்றவை நிறைந்துள்ளது. — கிராம்பு செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். மேலும் இது வாய்வு தொல்லை, வயிற்று எரிச்சல் மற்றும் குமட்டல் போன்றவற்றையும் சரிசெய்யும். எனவே உங்களுக்கு வயிறு சரியில்லாதது போல் இருந்தால், கிராம்பை பொடி செய்தோ அல்லது வறுத்தோ தேனுடன் கலந்து உட்கொள்ள உடனே சரியாகும். — கிராம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. சர்க்கரை நோயாளிகள் கிராம்பை தினமும் உட...