கிராம்பில்_உள்ள_பலவித_மருத்துவ_குணங்கள்
கிராம்பில்_உள்ள_பலவித_மருத்துவ_குணங்கள்
-
மசாலா பொருட்கள் அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என அனைவருக்குமே தெரியும். அதிலும் கிராம்பில் ஏராளமான நன்மைகள் நிறைந்திருப்பது சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. பல் வலி என்றால் உடனே ஒரு கிராம்பை வாயில் போட்டு கடித்துக் கொண்டால், பல் வலி போய்விடும் என்று சொல்வார்கள்.
—
கிராம்புவில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தீர்க்கலாம். கிராம்புகளில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், நியாசின், ஃபோலேட், வைட்டமின் சி, பி, ஈ, கே மற்றும் டி போன்றவை நிறைந்துள்ளது.
—
கிராம்பு செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். மேலும் இது வாய்வு தொல்லை, வயிற்று எரிச்சல் மற்றும் குமட்டல் போன்றவற்றையும் சரிசெய்யும். எனவே உங்களுக்கு வயிறு சரியில்லாதது போல் இருந்தால், கிராம்பை பொடி செய்தோ அல்லது வறுத்தோ தேனுடன் கலந்து உட்கொள்ள உடனே சரியாகும்.
—
கிராம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. சர்க்கரை நோயாளிகள் கிராம்பை தினமும் உட்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு சீராக்கப்பட்டு, இன்சுலின் அளவும் சீராக இருக்கும். எனவே உங்களுக்கு நீரிழிவு வராமல் இருக்க வேண்டுமெனில், கிராம்பை உட்கொண்டு வாருங்கள்.
—
உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது. ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக் கோளாறுகள் நீங்குகின்றன.
—
கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும். சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
—
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
—
கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும். தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
—
கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது. கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
Comments
Post a Comment